திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்., 13ஆம் தேதி பிரச்சாரம் தொடங்கவுள்ள நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளிக்க உள்ளார். முதல் மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியிலும், 2வது மாநாட்டை மதுரை பராபத்தியிலும் நடத்திய விஜய், முதல் தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக திருச்சியை தேர்வு செய்துள்ளாராம்.




