ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் ஹைதராபாத் அணிக்கும் குஜராத் அணிக்கும் ஹைதராபாத்தில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற குஜராத், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் 152க்கு 8 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், நிதிஷ் ரெட்டி என்னும் வீரர் 31 ரன்களும் க்ளாஸென் 27 ரங்களும் சும்மின்ஸ் 22 ரங்களும் எடுத்தனர். அனால் மத்த வீரர்கள் அவர்களுக்கு கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் குஜராத் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து ஹைதராபாத் அணியை பந்தாடினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய குஜராத் அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், கில் 61 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 49 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை கொடுத்ததால் இலக்கை 16.4 ஓவரிலேயே பூர்த்தி செய்து ஹைதராபாத் அணியை குஜராத் அணி வென்றது.




