10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அருண் ஆபிரகாம்-ஷெரின் தம்பதியினரின் 10 மாத மகள் ஆலின், கடந்த 5ஆம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். மனம் தளராத பெற்றோர், ஆலினின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். கொச்சியில் நடந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரகங்கள், கல்லீரல், இதய வால்வுகள், கண் படலங்கள் தானமாகப் பெறப்பட்டன. உடல் உறுப்புகளை தானம் செய்த ஆலின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Read Previous

தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலை திட்டம்..!!

Read Next

இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular