திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு ₹2.79 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நோட்டீஸில், அவரது பெயரில் ‘ஆர்.எம். ட்ரேடர்ஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால், 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் சம்பளத்தைக் கூட எடுக்க முடியாமல் அந்த பெண் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது பெயர் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது மற்றும் நோட்டீஸ் எந்த சூழ்நிலையில் அனுப்பப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும்.




