AAI-யில் 389 வேலைவாய்ப்புகள்.. பொறியியல், MBA, சட்டப் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..!!

 

 

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) மேலாளர் (Manager) மற்றும் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணிகளுக்காக 389 காலியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

 

📌 மொத்த காலியிடங்கள்: 389

 

🎓 கல்வித் தகுதி:

பொறியியல், MBA, PGDM அல்லது சட்டப் பட்டம் (பணியிடத்தைப் பொறுத்து).

 

👤 வயது வரம்பு:

 

– மேலாளர் – அதிகபட்சம் 32 வயது (3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்)

– இளநிலை நிர்வாகி – அதிகபட்சம் 27 வயது

 

📝 தேர்வு முறை:

கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் நேர்காணல்.

 

📅 விண்ணப்ப காலம்:

ஆகஸ்ட் 8, 2026 முதல் செப்டம்பர் 7, 2026 வரை.

 

💳 விண்ணப்பக் கட்டணம்:

SC, ST, OBC மற்றும் பெண்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்து, கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு:  www.aai.aero.

Read Previous

2031 தேர்தல் குறித்து ஜோதிடர் கணிப்பு.. “விஜய் VS தனுஷ்” போட்டியா?..

Read Next

மீனாட்சி அம்மன் கோயில் நிலம் முறைகேடு வழக்கு.. 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular