இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘DC’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருப்பதால், டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும், ‘DC’ திரைப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிரெய்லர் வெளியான பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.




