முறையான முதலீட்டு திட்டம் (SIP) என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான ஒரு அணுகுமுறையாகும். இந்த SIP திட்டத்தின் மூலம் தினசரி பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம். இந்த திட்டமானது சம்பளம் பெறும் தினசரி ஊழியராக இருந்தாலும் சரி அல்லது தொழில் செய்பவராக இருந்தாலும் சரி உங்கள் எதிர்காலத்திற்கான வலுவான நிதி அடித்தளத்தைக் கொடுக்கும்.
அதாவது நீங்கள் தினமும் 100 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் SIP ல் முதலீடு செய்தால், மாத இறுதியில் ரூ.3000 SIP ல் முதலீடு செய்து இருப்பீர்கள். மேலும், உங்கள் சராசரியான ஆண்டு வருமானத்தில் 12% முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.6,97,017 கிடைக்கும். இதில் முதலீட்டுத் தொகை ரூ.3,60,000 ஆகவும், மூலதன லாபம் ரூ.3,37,017 ஆகவும் இருக்கும். இதுவே 20 ஆண்டுகளுக்கு SIP திட்டத்தில் முதலீடு செய்தால், மொத்தம் ரூ.7,20,000 முதலீடு செய்து இருப்பீர்கள். இதில், ரூ.29,97,444 நிதியை உருவாக்கலாம், இதில் மூலதன ஆதாயம் ரூ.22,77,444 ஆக இருக்கும்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.100, SIP திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1,05,89,741 வரை நிதி உருவாக்கலாம். இதே 40 வருடங்களுக்கு தொடர்ந்து SIP திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.3,56,47,261 வரை நிதியை உருவாக்கலாம். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு திட்டங்கள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, எனவே ரிஸ்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.




