
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, பள்ளியில் நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர். அப்போது, 67 வயதான திலீப் நாம்தேவ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக 11 வயது சிறுமி தனது ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஆசிரியை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.