
கோவை: வடவள்ளி, பாலாஜி பத்மாவதி நகரை சேர்ந்த தம்பதி கோபால் (44) – வீராயி (40). இவர்களுக்கு நான்கு மகள்கள். முதல் மூன்று மகள்களுக்கு திருமணமாகி, கணவருடன் வசித்து வரும் நிலையில் கடைசி மகள் துர்கா தேவி (13) ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். துர்கா செல்போனில் மூழ்கியதை பார்த்த வீராயி திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த துர்கா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.