தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு தொடர் கனமழை..!! இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு அதாவது 12, 13 ஆகிய தேதிகளில் தொடர் கனமழை என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு..

தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று வியாழக்கிழமை தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, இதனிடையே நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தள்ளிப்போனது இது நாளையோ அல்லது நாளை மறுதினமும் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர், இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிர அடையும் என கூறப்படுகிறது, இந்த நிலையில் இன்று முதல் பத்தாம் தேதி வரையிலும் 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரினங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது கனமழை வாய்ப்பு என்பதால் இந்த ஆறு நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது..!!

Read Previous

நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

Read Next

வடபழனியில் அறநிலை துறை சார்பில் கந்த சஷ்டி கவச விழா : 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular