விஜயின் அறிவிப்பு பிற கட்சிகளை இழிவுபடுத்தக்கூடியது கே.பாலகிருஷ்ணன்..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியது…

நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளனர் நடிகர் விஜய் மட்டும்தான் கட்சி தொடங்கினார். என்று கூற முடியாது 45 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய பேர் ஆட்சி ஆரம்பித்தனர் இதைவிட பிரம்மாண்டமான விழாக்கள் எல்லாம் அப்போது நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம் நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது இதைவிட கூட்டம் பல மடங்காக பெருக எடுத்தது எனவே புதிதாக ஒரு கட்சியை தொடங்கி விட்டால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் அதற்கு நாங்கள் என்ன பதில் சொல்கிறோம் என்பது குறித்து சொல்ல வேண்டிய தேவை கிடையாது, நாளை அவை நடைமுறைக்கு வரும்போது அது குறித்து எங்களுடைய கருத்தை கூறுவோம். நிச்சயமாக விஜயின் வருகையோ அவருடைய அறிவிப்புகளோ நிச்சயமாக திமுக கூட்டணிக்குள் எந்தவிதமான சலிப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை, அது தொடர்பாக ஏற்பட்ட பல்வேறு விதமான சந்தேகங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர், இவ்வாறு நான் கூறுவதால் திமுக அரசுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படவில்லை என்று நான் கூற விரும்பவில்லை, எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்கான கோரிக்கைகளை நாங்கள் கேட்க தான் செய்வோம் திமுக அரசுடன் கூட்டணியில் இருப்பதால் samsung பிரச்னையை நாங்கள் விட்டுக் கொடுத்து விட முடியுமா கூட்டணியில் இருப்பதால் நிலங்களை கையகப்படுத்துவதை நாங்கள் ஏற்க முடியுமா எனவே அந்த போராட்டம் என்பது தொடரும் அது அதிமுகவோ அல்லது வேறு கட்சியும் யார் ஆட்சியில் இருந்தாலும் அதை தொடர்ந்து தான் செய்வோம் அதே நேரத்தில் பாஜக என்கிற மதவெறி அரசாங்கம் ஆட்சியை எதிர்த்து நாங்கள் நிச்சயமாக இணைந்து செயல்படுவோம் எனவே கருத்து வேறுபாட்டுக்கு இதற்கு முடிச்சு போட்டு கூட்டணி இருப்பதால் விட்டுக் கொடுத்து விடுவோம் என்று பேச்சுக்கே இடமில்லை மேலும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவுத்திருப்பதற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் அறிவிப்புக்கு நான் எப்படி பதில் அளிப்பது அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக அறிவித்தால் வேறொரு கூட்டணியில் இருப்பவர்கள் வருவார்கள் என்று நினைப்பதே தவறு, ஒரு கொள்கையை அறிவித்து அந்த கொள்கைக்காக இணையம்படி அழைப்பது வேறு என கூறியுள்ளார்..!!

Read Previous

பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு..!!

Read Next

காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular