2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால், மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையக்கூடும். ஆனால், இதனால் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மேலும், பெட்ரோலில் எத்தனால் கலவையை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.




