பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் இன்னும் ஒரு சில சில தவிர்க்க முடியாத சூழலில் நாம் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் இந்த விடுமுறை நாட்களை அறிந்து அதற்கேற்றவாறு பண பரிவர்த்தனை நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.
விடுமுறை பட்டியல்:
03.08.2024 – கேர் பூஜை காரணமாக அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை
04.08.2024 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
04.08.2024 – புனித பிரான்சிஸ் சவேரியார் பெருவிழா. பனாஜியில் வங்கி விடுமுறை
07.08.2024 – ஹரியாலி தீஜ் காரணமாக ஹரியானாவில் வங்கிகளுக்கு விடுமுறை
08.08.2024 – Tendong Lo Rum Fat காரணமாக காங்டாக்கில் விடுமுறை
10.08.2024 – 2 – வது சனிக்கிழமை விடுமுறை
11.08.2024 – ஞாயிற்றுக்கிழமை
13.08.2024 – தேசபக்தர் தினத்தை முன்னிட்டு இம்பாலில் வங்கிகள் மூடப்படும்.
15.08.2024 – சுதந்திர தினம் என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்
18.08.2024 – ஞாயிறு விடுமுறை
19.08.2024 – ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
20.08.2024 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி கொண்டாடப்படுவதால், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் இயங்காது.
24.08. 2024 – 4 – வது சனிக்கிழமை
25.08.2024 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
26.08.2024 – ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுவதால், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.