பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில தேவைக்காக வங்கி கிளையை அணுக வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியல், முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறைகள்:
- ஜூலை 3: மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் 3 ஜூலை 2024 அன்று BehDienkhlam விழாவையொட்டி மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 6: MHIP தினத்தையொட்டி இந்த நாளில் ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 7: ஞாயிற்றுக் கிழமை, வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
- ஜூலை 8, 2024: காங் ரதஜாத்ராவை முன்னிட்டு இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
- ஜூலை 9, 2024: காங்டாக்கில் உள்ள வங்கிகள் ட்ருக்பா ட்ஷே-ஜியை முன்னிட்டு மூடப்பட்டுள்ளன.
- ஜூலை 13, 2024: மாதத்தின் 2வது சனிக்கிழமை, அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
- ஜூலை 14 2024: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
- ஜூலை 16 2024: ஹரேலாவை முன்னிட்டு டேராடூனின் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 17 2024: முஹர்ரம் பண்டிகையையொட்டி நாட்டின் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- ஜூலை 21 2024: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
- ஜூலை 28 2024: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.