22 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இருந்து விடுதலையான சுகாதாரத்துறை அமைச்சர்..!!

“22 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இருந்து விடுதலையான சுகாதாரத்துறை அமைச்சர்…!! “பல ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய கோர்ட்…

கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மாமன்ற கூட்டத்தில் எதிர் கட்சியினரை தாக்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு தொடரப்பட்டது.  மேலும் அந்த கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க வினரை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுகுமார் பாபு, ரீட்டா ஆகிய இருவரும் அ.தி.மு.க சார்பில் மா. சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இதனால் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இது குறித்து மொத்தம் 70 பேரிடம் சாட்சியம்  பெறப்பட்டு 22 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டது. மேலும் அனைத்து கட்ட விசாரணைகளுக்கு பிறகு இன்று (10.01.2025) தீர்ப்பு வழங்குவதாக மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, இன்று வெளியான தீர்ப்பில், குற்றசாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் சாட்சியம் அளித்தவர்கள் பிறழ் சாட்சியாக மாறியதாலும் இந்த வழக்கில் உள்ள  மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக கோர்ட் தீர்ப்பளித்தது.

Read Previous

Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!! சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!

Read Next

கையில் இந்த ரேகை இருந்தால் ஜாக்போட் தான்..!! ஆயுசு முழுக்க சுக்ர திசை ஆதிக்கமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular