Oplus_131072
பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது, இது மாலைக்கண் நோய் மற்றும் பிற கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். இவ்வளவு நன்மை கொண்ட பொன்னாங்கண்ணி கீரையை எப்படி செய்வது என்று வீரன்வீடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்பொம்.
பொன்னாங்கண்ணி கீரை
துருவிய தேங்காய்
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
உளுத்தம்பருப்பு
கடுகு
சீரகம்
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரையை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
தாளித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மஞ்சள் தூள் சேர்க்கவும். நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரையைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு மிதமான தீயில் வதக்கவும்.
கீரை சுருங்கி வெந்துவிடும். கீரை வெந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
மேலும் பொன்னாங்கண்ணி கீரை சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். இதில் உள்ள சத்துக்கள் சரும சுருக்கங்களை தடுக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. இது இரத்தத்தை சுத்தப்படுத்தவும், இரத்த சோகையைத் தவிர்க்கவும் உதவுகிறது.
பொன்னாங்கண்ணி கீரை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமை கிடைக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரை தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் எண்ணெயை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் குறையும்.




