கனரா வங்கி:
இவ்வங்கியானது ரெப்போ லிங்கிடு லெண்டிங் ரேட் (RLLR) யை 9.25% லிருந்து 9% ஆக குறைத்துள்ளது. இந்த சலுகை கடந்த பிப்ரவரி 12, 2025 அன்று அல்லது அதற்கு பின் கணக்கு தொடங்கியவர்களுக்கு பொருந்தும்.
பேங்க் ஆப் பரோடா:
இவ்வங்கியானது வீட்டு கடன் மீதான வட்டி விகிதத்தை அதாவது, RLLR யை 8.90% ஆக குறைத்துள்ளது. மேலும், இது கடந்த பிப்ரவரி 10, 2025 முதல் அமலுக்கு வந்தது.
பேங்க் ஆப் இந்தியா:
இந்த வங்கி தனது RLLR வட்டி விகிதத்தை 9.35% லிருந்து 9.10% ஆக குறைத்துள்ளது. மேலும், இது கடந்த பிப்ரவரி 7, 2025 முதல் அமலுக்கு வந்தது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா:
இவ்வங்கியானது கடந்த பிப்ரவரி 11, 2025 அன்று முதல் தனது RLLR வட்டி விகிதத்தை 9.25% லிருந்து 9.0% ஆக குறைத்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி:
இந்த வங்கி தனது RLLR வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.35% லிருந்து 9.10% ஆக குறைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி:
இவ்வங்கியானது கடந்த பிப்ரவரி 10, 2025 அன்று முதல் தனது RLLR வட்டி விகிதத்தை 9.25% லிருந்து 9.0% ஆக குறைத்துள்ளது.




