
60 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!! உங்களுக்கான பதிவு தான் இது..!!
60 வயது கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படித்து இதன் மூலம் கிடைக்கும் செய்தியை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தி பாருங்கள். 60 வயதுக்கு மேல் நிம்மதியாக வாழ வேண்டுமானால் அமைதியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள யாரையாவது திருத்தியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒருபோதும் இருக்காதீர்கள். இதனால் உங்களின் சந்தோசம் நிம்மத இவைதான் போகும். இதனால் மன அழுத்தம் உண்டாகும். அதுமட்டுமின்றி உங்கள் வீட்டில் தோலுக்கு மேல் வளர்ந்தவர்களை உங்கள் தோழன் என்று நினைத்து அவர்களை புரிந்து கொள்ளுங்கள்.
நோய்நொடி என்றால் அந்த காலம் போல் விழுந்து விழுந்து உறவும் நட்பும் நம்மை கவனிக்கும் காலம் இது அல்ல என்பதை கண்டிப்பாக நீங்கள் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களை குறை கூறி நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை ஒருபோதும் இழக்காதீர்கள். வாழ்க்கை என்னும் கிணற்றின் முக்கால் பகுதியை கடக்க மனதில் உள்ளவற்றை ஆரோக்கியமாக வைத்து உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்தவிதமான கோபமும் மன அழுத்தமும் இல்லாமல் இருங்கள்.