12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு டிசி கொடுத்து பள்ளியில் இருந்து வெளியே அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிந்ததும் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு 12ம் தேதி அந்த மாணவிக்கு டிசி வழங்கியுள்ளனர். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 8 மாதம் ஆகியும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் போனது எப்படி? என்றும், திடீரென டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டது ஏன்? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




