Oplus_131072
91 வயது மூதாட்டியின் கண்ணீர்க் கதை: நீதிபதியையே உலுக்கிய தருணம்
91 வயது மூதாட்டி ஹெலன் கைதான காட்சி —
அதை பார்த்தவர்கள் யாரும் இதயத்திலே ஒரு கஷ்டத்தை உணராமல் இருக்க முடியவில்லை.
மருத்துவமனை கவுன் போர்த்தியபடி, கைகளில் சங்கிலிகள் பூட்டப்பட்ட நிலையில்,
சோர்வு நிறைந்த முகத்தோடு நின்ற ஹெலனைப் பார்த்ததும்,
அங்கு இருந்தவர்கள் பலரின் கண்களும் கண்ணீரால் நனைந்தன.
திருட்டு குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டாராம் என்ற செய்தியை கேட்டபோது,
நீதிமன்றத்தில் இருந்த நீதிபதியே கூட சில நொடிகள் நம்ப முடியாமல் நின்றார்.
65 ஆண்டுகளாக வாழ்க்கையை பகிர்ந்து வாழும் ஹெலனும்,
அவருடைய 88 வயது கணவர் ஜார்ஜும் மிகச் சிறிய வருமானத்தில் வாழ்க்கையை வாழும் தம்பதிகள்.
கடுமையான மாரடைப்பால் அவதிப்படும் ஜார்ஜின் உயிர்
தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய மருந்துகளில்தான் இருக்கிறது.
ஆனால் நிதி நெருக்கடி காரணமாக
அவர்களின் மருத்துவ காப்பீடு கடந்த மாதமே காலாவதியானது.
இயல்பாக 50 டாலருக்கு கிடைக்கும் அந்த மருந்தின் விலை
திடீரென 940 டாலராக உயர்ந்தது.
கையில் பணமில்லாத ஹெலன்,
உலகமே சுருண்டுவிட்டதுபோல் உணர்ந்து, மருந்து வாங்காமல் வெறுங்கையோடு மருந்தகத்திலிருந்து திரும்பினார்.
அடுத்த மூன்று நாட்கள் —
அவளது கணவர் மூச்சுவிட துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஒரு கடைசி முயற்சியாக மீண்டும் மருந்தகத்திற்குச் சென்றாள்.
ஒரு கணம் மருந்தாளர் கவனிக்காதபோது, ஜார்ஜின் உயிரைக் காப்பாற்றும் அந்த மருந்தை தன் கைப்பையில் நழுவவைத்தாள். ஆனால் வாசலை அடையும் முன்பே அவள் பிடிபட்டாள்.
திருட்டு குற்றச்சாட்டில் போலீசார் அவளை கைது செய்தனர்.
கைது செய்யும் தருணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவளது இரத்த அழுத்தம் ஆபத்தான நிலைக்கு சென்றது. அவளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், பின்னர் நீதிமன்றத்திற்குப் பிரசன்னப்படுத்தினர்.
“என்னால வேற எதுவும் செய்ய முடியவே இல்லை…” என்று நடுங்கும் குரலில் ஹெலன் சொன்னாள்.
“அவர் தான் எனக்கு எல்லாமே.”
அவளை நீண்ட நேரம் கவனமாக பார்த்திருந்த நீதிபதி
ஒரு நிமிடம் அமைதியாக நின்றார்.
பின்னர் அவரது குரல் கூர்மையாக தெளிவாக ஒலித்தது:
“அவளின் சங்கிலிகளை கழற்றுங்கள். இவர்கள் குற்றவாளிகள் அல்ல…
எங்கள் சமூக அமைப்பு எவ்வளவு தோல்வியடைந்திருக்கிறது என்பதை உயிருடன் சொல்லிக்காட்டும் சான்று இவர்கள்.”
இந்த நிகழ்வு வெளிநாட்டில் நடந்ததென்றாலும், நம் நாட்டிலும் எத்தனை பேருக்கு ஒரு வேளை உணவிற்கோ, ஒரு சிறிய மருந்திற்கோ கூட
பணம் இல்லாமல் தவிக்க வேண்டிய நிலை இருக்கிறது என்பது
இதயம் வலிக்கும் உண்மை.




