பகிரங்கமாக நான் அழவில்லை
என்பதனால் எனது எல்லா
வலிகளும் வேதனைகளும்
முடிந்து விட்டதாக
அர்த்தம் இல்லை..!!
எத்தனை இரவுகள் தூக்கம்
தொலைத்த என் கண்களினுள்ளே
துக்கம் நிறைந்த கண்ணீரை
துடைப்பதற்கு கூட
அருகில் யாருமில்லாமல் …
துடிதுடித்து அழுத
நாட்களை இன்னும்
நான் மறக்கவில்லை…
மனதின் வலி தாளாது வாய் விட்டு
அலறி துடித்த
பொழுதுகளை இதுவரையில்
நான் மறக்கவில்லை…!!
கண்ணீரும் காய்ந்து போக
வறண்டு போன உதடுகளுளோடு
வலு கட்டாயமாக வரவழைத்து
கொண்ட ஒரு புன்னகையை
முகத்தில் ஒட்ட வைத்து கொண்டு
மிச்ச வாழ்வுக்கான கடமையை
முடித்து வைக்க….
எனக்குள் புதைத்து கொண்டேன்
என் ஒட்டு மொத்த வலிகளையும்..!!
இருந்தும் இந்த வாழ்வை
கடந்து போக
பல குணம் கொண்ட
மனித வடிவங்களை நான்
கடந்தாக வேண்டும்…
அதற்காக ஒரு உலர்ந்த
புன்னகையை உதிர்த்து
விட்டு செல்கிறேன்
அது உங்கள்
பார்வையில் நான் எல்லாம்
மறந்ததாக தெரிகிறது.. 🥀🥀✨
யாரிடமும் சாய்ந்து கொண்டு
ஆறுதல் தேடாத கர்வம் இது
எனவே இந்த புன்னகையில்
திமிர் இருக்கத்தான் செய்யும்..
முடிந்தால் முயன்று பாருங்கள்
வேதனையின் போது
கண்கள் கலங்கி இருக்கும் போதே
உதட்டில் சிரிப்பை கொண்டு வர… 🙂🧡✨
அது_எவ்வளவு_கர்வம்_நிறைந்தது
அது_எவ்வளவு_திமிரானது_என்று.. 🖤




