இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணத்திற்கு பஞ்சம் வராதாம்..!!

வீட்டிற்குள் வளர்க்கும் மணி பிளான்ட் வாடுகிறதா..? இந்த டிப்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!
வீட்டில் அழகுக்காக மணி பிளான்ட் வளர்ப்போர் பலர். சில அதிர்ஷ்டம் தரும் என்ற நம்பிக்கையில் மணி பிளான்ட் வளர்க்கின்றனர். எந்த நோக்கமாக இருந்தாலும் வாங்கி வந்த செடியை நல்ல முறையில் பராமரித்தால் மட்டுமே செழித்து வளரும். அந்த வகையில் நீங்கள் ஆசையாக வாங்கி வந்த மணி பிளான்ட் வாடும்போது கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கும். எனவே மணி பிளான்ட் வளர்ப்பதற்கு சில பராமரிப்பு வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றுங்கள். நன்கு செழித்து பசுமையாக வளரும்.

சின்னஞ்சிறு தண்டு ஒன்றை ஊன்றி வைத்தால் கூட, அதிலிருந்து பெரிய அளவுக்கு இது படர்ந்து வளரக்கூடியது. நீண்ட நாட்களுக்கு தண்ணீர் ஊற்றாவிட்டாலும் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி செழிப்பாக வளரக்கூடிய செடியாக இது உள்ளது. இந்த செடியை மென்மேலும் பசுமையாக, அழகாக வளர்த்தெடுக்க கீழ்காணும் டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றலாம்.
அதிக தண்ணீர் தேவைப்படாது : நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல மணி பிளாண்ட் செடியை வளர்ப்பதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. இது மிகுதியான வெப்ப சூழ்நிலையிலும் கூட தன்னை தகவமைத்துக் கொண்டு வளரக்கூடியது.

பராமரிப்பு முக்கியம் : என்னதான் வறட்சியை தாங்கி வளரக்கூடிய செடியாக இருந்தாலும் இதை முறையாக பராமரிக்காவிட்டால் இலைகளில் நீர்ச்சத்து வறண்டு வெள்ளையாக காணப்படும். பிறகு நாளடைவில் காய்ந்து சருகாக உதிரத் தொடங்கிவிடும்.

மண்ணை மாற்ற வேண்டும்: மண்ணின் தரம் சரியாக இல்லை என்றாலும் கூட இந்த செடி காய்ந்து சருகாக கொட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கின்ற மண் எடுத்து பயன்படுத்த வேண்டும்

இயற்கை உரம் : மணி பிளாண்ட் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் இயற்கையான உரம் லேசான அளவில் சேர்த்து வரலாம். மண்ணில் போதுமான சத்து இல்லை என்றால் இந்த செடி செழிப்பாக வளராது மற்றும் சோர்ந்து போவதற்கு வாய்ப்பு உண்டு.

நேரடி வெப்பம் ஆகாது : மணி பிளாண்ட் மீது நேரடியாக சூரிய ஒளி படரும் பட்சத்தில் மிகுதியான வெப்பம் தாங்காமல் கருகுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே கொஞ்சம் நிழல் தென்படும் இடத்தில் இந்த செடிகளை வளர்க்கலாம்..

தண்ணீரில் வளர்க்கலாம் : மண்ணில் மட்டுமல்லாது தண்ணீரிலும் மணி பிளாண்ட் வேகமாக வளர்ந்து வரக்கூடியது. அவ்வபோது தண்ணீர் மாற்றி தொட்டியில் வளர்த்து வந்தால் இந்த செடி பச்சை பசேலென்று காட்சியளிக்கும்.

அதிகப்படியான தண்ணீர் வேண்டாம் : மணி பிளாண்ட் செடி மூழ்கி விடும் அளவுக்கு மிகுதியான தண்ணீர் ஊற்ற வேண்டாம். இது வேர் அழுகலை ஏற்படுத்தி விடும். அதன் எதிரொலியாக செடி முற்றிலுமாக அழிந்து போக வாய்ப்பு உண்டு.

ஈரப்பதம் தேவை : மிகக் கடுமையான வெப்ப பகுதி அல்லது மூடிய அறைகளுக்குள் இந்த செடி வைக்கப்பட்டிருந்தால் அதற்கு ஈரப்பதம் தேவையா என்பதை அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும். செடி வாடி காணப்பட்டால் போதுமான அளவு ஈரப்பதம் கொடுக்க வேண்டும்.

இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணத்திற்கு பஞ்சம் வராதாம்!

Read Previous

ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

தேன் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் இதோ..!! கட்டாயமாக தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular