விஜய் அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்..
தமிழக வெற்றிக்கழக கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய் அண்மையில் தனது கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவுள்ளது, தமிழக சட்டசபை தேர்தலை குறி வைத்து நடிகர் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார், தற்போது அவர் கடைசி படத்தில் நடித்து வருகிறார் அதன் பிறகு முழுநேர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளார் என்றும், இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை என ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்த அவரிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் வரட்டும் கமலை போன்று விஜய் முயற்சி செய்து பார்க்கட்டும் அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது விஜய் தற்போது அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை விஜயால் அரசியலில் சாதிக்க வாய்ப்பே இல்லை முயற்சி செய்து பார்க்கட்டும் என ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கூறியுள்ளார்..!!




