வெளிநாட்டு வாழ்க்கை..!! வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்..!! படித்ததில் வலித்தது..!!

படித்ததில் வலித்தது,

வெளிநாட்டில் கணவன்- மனைவியிடம் உரையாடல் பதிவு ..

ஹலோ..

நல்லாருக்கியா..

ம் …நீங்க நல்லாருக்கீங்களா..

ம்..பையன் என்ன பன்றான்..

இப்ப தான் அத்தை வெளிய அழைச்சிட்டு போனாங்க..

ஓ..

அத்தை மாதிரியே சிரிச்சா அவனுக்கு கன்னதுல குழி விழுது…பாத்து பாத்து ரசிக்கிறாங்க

ம்..நைட்ல அழாம தூங்குறானா..

சாப்பாடு சாப்பிட்டதும் தூங்கிடுவான்..தூங்கும்போது மாமா மாதிரியே அவன் கால் மேல கால் போட்டு தூங்குறான்..

ம்..எல்லாம் சாப்டுறானா…

ம்..சில நேரம் அவனே சாப்டுவான் அப்படியே உங்க தங்கச்சிதான், நாலு விரலும் உள்ள போகுது..

என்னய மாதிரி என்ன பன்றான்..

ம்க்கும் கல்யாணம் பண்ணி அம்பது நாள்ல போனீங்க..மூனு வருஷமாகப் போகுது… என்னத்த சொல்றது..

…..

ஹலோ..

இருக்கேன்…சொல்லு..

தீபாவளிக்கு வந்துடுவீங்கள்ல…

பொங்கலுக்கு கண்டிப்பா வந்துடுறேன்..

தீபாவளிக்கு வரேனு போன மாசம் சொன்னீங்களே…

தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்குன கடன் போன மாசந்தான் முடிஞ்சுது.. மூனு வருஷம் கழிச்சி வரேன்.. சும்மா வரமுடியுமா.. சாமான்லாம் வாங்கனும்ல..

சாமானெல்லாம் வேண்டாம் தீபாவளிக்கு வரப்பாருங்க..

உனக்கு வேண்டாம்னா… சொந்த பந்தங்களுக்கு ஆளுக்கு ஒரு பொருளாவது கொடுக்கனும்ல..

…….

ஹலோ..

ம்…

பொங்கலுக்கு கட்டாயம் இருப்பேன்..

அடுப்ல சட்டி காயுது…நான் வைக்றேன்..

அப்றம் நைட் போன் பேசாதீங்க…

ஏய்…ஏன்..

தூங்க…முடியல…

நான் வக்கிறேன்…

😦😦😦😦

நிர்பந்தங்கள்..

சந்தர்பங்களாகும்போது..

பிழையோடு வீழாமல்

பழியோடு வாழாமல்

வழியின்றி..

வலியோடு..

கழிகிறது நாட்கள்😢😢😢😢😢

வெளிநாட்டிலும்….வேக்காட்டிலும்.

#வெளிநாட்டு_வாழ்க்கை.?…

Read Previous

ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

இனிமே நீங்களும் இந்த மாதிரி இட்லி பொடி செஞ்சு பாருங்க..!! செம்மயா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular