முருங்கை இலை பொடி
தேவையானவை:
நன்கு காயவைத்த முருங்கை இலை – ஒரு பெரிய கப்
வெள்ளை எள் – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – 10
பூண்டு – 5 பல்
புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முருங்கை இலையை வெயிலில் நன்கு காயவைக்கவும்.
பிறகு, கைகளால் கசக்கினாலே நன்கு பொடியாகிவிடும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் உளுத்தம்பருப்பை தனியாக வறுத்தெடுக்கவும்.
பிறகு, எள், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.
பூண்டு மற்றும் புளியைத் தனியாக நன்றாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.
வறுத்து ஆறவைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, நொறுக்கிய முருங்கை இலை சேர்த்துக் கலந்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
இந்த முருங்கை இலை பொடி இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்தது.




