‘அம்மா’.. ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்

பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

 

ஒரு பிடி சோற்றைக் கூட – அதிகமாய்

உட்கொள்ளாத வயிறு..!

 

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்

உலக அதிசயம்..!

 

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்

வந்தாலும்

 

கருவறையை விடப் பாதுகாப்பான

அறையை

 

குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?

இறைவனின் வல்லமைக்கு இதனை விட

சான்று வேண்டுமா..?

 

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப்

போகிறது

 

பத்து மாதம் சுமந்தாலும்

கருவறை கனப்பதில்லை..!

 

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் –

 

ஆனால்

இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

 

மனைவியாய் வளரும் உறவு

தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

 

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை

தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம்

 

எல்லாவற்றையும் விட

தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது…..

Read Previous

கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பழனி மலை முருகன் கோயிலுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!! அமைச்சர் போட்ட புது உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular