பழனி மலை முருகன் கோயிலுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!! அமைச்சர் போட்ட புது உத்தரவு..!!

தை மற்றும் பங்குனி மாதம் என்றாலே முருகனுக்கு உகந்த மாதங்கள் ஆகும். இந்த மாதங்களில் முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகனை மனதார நினைத்துக் கொண்டு இருப்பார்கள். இதில் பல பேர் பலனி முருகன் கோயிலுக்கு சென்று வருவார்கள். அப்படி செல்லும் ஒரு நாள்தான் பங்குனி உத்திரம். வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் வரவிருக்கையில் பழனி மலை முருகன் கோயிலில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது வரும் 11ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கட்டண தரிசனங்கள் பழனி மலை முருகன் கோயிலில் ரத்து செய்யப்படுகிறது என்று சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்ய காரணம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நிறைய பக்தர்கள் காவடி சுமந்து பழனிக்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் கூட்ட நெரிசலின் காரணமாக எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்று இப்படி ஒரு உத்தரவை தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டதும் பக்தர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். பல பேர் மாலை போட்டு விட்டு இந்த தருணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

‘அம்மா’.. ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

கோயில்களில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular