ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் குஜராத் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் குஜராத்தில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் வீரர்கள் 217க்கு 6 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், சாய் சுதர்ஷன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் ராஜஸ்தான் அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் துஷார் டெஸ்பாண்டே மற்றும் மகிஷா தீக்ஷண தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய ராஜஸ்தான் அணி இதிலும் சுமாராக தான் விளையாடியது. ஹெட்மயேர் 52 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. இறுதியில் ராஜஸ்தானால் வெறும் 159 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை வென்ற குஜராத் அணி தனது நான்காவது வெற்றியை இந்த வருடம் பதிவு செய்தது.




