கர்ப்பிணி பெண்களுக்கு உதவக்கூடிய அற்புதக்கீரை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
கர்ப்பிணி பெண்களுக்கு உதவக்கூடிய அற்புதக்கீரை என்னவென்றால் அது பாலக்கீரை தான். முதலில் தேவையான அளவு பாலக்கீரை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சிறு பருப்பை சேர்த்து மேல் தட்டில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை வைத்து நீராவியில் வேக வைக்க வேண்டும். ஒரு வாணலியில் நீராவியில் வேகவைத்த பாலக்கீரை போட்டு அதில் வேகவைத்த பருப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி ஒருவேளை உணவாக சாப்பிடவும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகக்கூடிய மலச்சிக்கலை போக்கும். கர்ப்பிணி பெண்கள் மேற்கூறிய முறையில் பாலக்கீரை வேகவைத்து ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு தீராத மலச்சிக்கல் கூட தீர்ந்து விடும்.




