This photograph taken on June 8, 2023, shows the production chain for water bottles at the Dilo water bottling plant in Montsinery Tonnegrande, in the French overseas territory of French Guiana. The Dilo water bottling plant was founded by former French football player Bernard Lama. (Photo by jody amiet / AFP) (Photo by JODY AMIET/AFP via Getty Images)
ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான விஷயமாகும். அதிலும் கோடைகாலம் என்றால் இன்னும் அதிகமாக குடிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் வரை சரி, ஆனால் வெளியே எங்கேயும் சென்றாள், செல்லும் இடத்திற்கு தண்ணீரை கொண்டு போக அனைவரும் யோசிப்பார்கள். நமது வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு பதிலாக கடைகளில் தண்ணீர் வாங்கி கொள்ளலாம் என்று நாம் நினைத்து வருகிறோம். ஆனால் அப்படி செய்வதால் கிடைக்கும் தீமைகளை என்னென்னவென்று இந்த பதிவில் காண்போம்.
கடைகளில் பாட்டில்கள் வாங்குவதால் நமக்கு கிருமி தொற்றுகள் நிறைய ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் அந்த பாட்டில்களை கழுவுவார்களா என்று நமக்கு தெரியாது. நமது வீட்டில் இருக்கும் பாட்டில்களை கழுவவில்லை என்றாலே கிருமி தொற்று அதிகமாக ஏற்படும். அப்போது இந்த பாட்டில்களில் எவ்வளவு பாக்டீரியாக்கள் தங்கி இரக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
அதிலும் கடைகளில் வாங்கும் பாட்டில்களை நாம் வாய் வைத்து தண்ணீர் குடித்தாலோ அல்லது வெகு நேரம் வைத்திருந்து தண்ணீர் குடித்தாலும் நிச்சயமாக நமக்கு பல பிரச்சனைகள் வரும் அபாயம் இருக்கிறது. இதிலிருந்து எல்லாம் விடுபட வீட்டிலேயே நன்கு சுத்தம் செய்த பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதை கொண்டு வந்து குடிக்கலாம். அப்படி செய்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்கலாம்.



