முளைகட்டிய பயிரை வைத்து சூப் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

முளைகட்டிய பயிரை அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். ஏனெனில் அதில் அதிகம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்க நினைக்கின்றவர்கள் இதை அதிகமாகவே சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்திற்கு புற்றுணர்வு தரும். இதை வைத்து சூப் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய பயிறு – 1 கப்

வெண்ணெய் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உப்பு மற்றும் மிளகுத்தூள் – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் முளைகட்டிய பயிரை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து சிறிதாக பயிரை மட்டும் தனியாக எடுத்து வைத்து மீதமுள்ள பயிரை தண்ணீருடன் சேர்த்து அரைத்திட வேண்டும். பின் கனமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்து வைத்த பயிரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தபின் மிளகுத்தூள் சிறிது சேர்த்து இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான முளைகட்டிய பயிர் சூப் தயார்.

Read Previous

எல்லோருக்கும் பிடிக்கின்ற வடை மோர்க்குழம்பு..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

AC- யை மழை பெய்கின்ற பொழுது உபயோகித்தால் என்ன ஆகும் தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular