பணம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகித்து வருகிறது. இந்த பணத்திற்காக தான் நாம் பலர் உழைத்துக் கொண்டு வருகிறோம். இந்த பணம் இருந்தால் தான் பல விஷயங்கள் நடக்கும். இவ்வளவு ஏன் நமக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் கூட பணத்தை கொடுத்தால் தான் கிடைக்கும். அப்படிப்பட்ட சமுதாயத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை எப்படி நம்மிடமே தங்க வைப்பது என்று இந்த பதிவில் காண்போம்.
நாம் பணத்தை செலவிடும் போது எங்கு எப்படி எதற்காக செலவிடுகிறோம் என்று கவனிக்க வேண்டும். மாதந்தோறும் பட்ஜெட்டை தயார் செய்து அதன்படி செலவு செய்ய வேண்டும். தேவையில்லாத பொருட்களுக்காக நாம் அதிகம் பணங்களை செலவு செய்யக்கூடாது. அத்தியாவசிய பொருள்களுக்கு செலவு செய்ய தயங்கவும் ஒருபோதும் கூடாது.
பணத்தை சேமிப்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அதுவும் சேமிக்கும் பணத்திற்கு தனியாக வரவுவைத்து பழக வேண்டும். எவ்வளவு சேமிக்க வேண்டுமோ அதன் இலக்கை நிர்ணயம் செய்து அதனை தனியாக எழுதி வைக்க வேண்டும். இந்த பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்தால் நம்மை விட்டு எங்கும் பணம் ஓடிப்போகாது.




