ஐபிஎல் பல சிறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஒரு முக்கிய களமாகவே காணப்படுகிறது. பலவீரர்கள் தங்களது சிறு வயதிலேயே அணிகளுக்கு ஆடி தங்களது சொந்த நாட்டிற்காக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தின்போது வைபவ் சூர்யவன்ஷி என்னும் வீரரை அவரது 13 வயதிலேயே 1 கோடியே 10 லட்சம் கொடுத்து எடுத்தது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
இதனைப் பார்த்து பல அணிகள் ராஜஸ்தான் அணியை பாராட்டி வந்தனர். ஆனால் இதுவரை நடந்த ஏழு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னதான் சிறு வயதில் அணிக்குள் வந்தாலும் விளையாட ஒரு சில காலம் ஆகும் என்று அனைவரும் கூறி வந்தனர். அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக இந்த சிறுவன் அவரது முதல் போட்டியை நேற்று விளையாடினார்.
தனது முதல் போட்டியிலேயே சந்தித்த முதல் பந்தில் அசத்தலான சிக்ஸர் அடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். இந்த 14 வயது சிறுவனின் அசத்தலான ஆட்டத்தையும் அடித்த பெரிய சிக்ஸர்களையும் பார்த்து அனைவரும் திகைத்து நின்றனர். 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆன இவர் டக்வுட்டுக்கு செல்லும்போது அழுது கொண்டே சென்றது அனைவரின் மனதிலும் பாரத்தை ஏற்படுத்தியது. இந்த சிறு வயதிலேயே ஒரு சிறுவன் இப்படி ஆடுவதும் அதற்கு அந்த அணி இடம் கொடுப்பதும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.




