குலதெய்வ கோவிலுக்கு சென்றால் என்ன ஆகும் தெரியுமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
குலதெய்வ கோயிலுக்கு சென்றால் மிகவும் நல்லது. அனைவரும் எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஏனென்றால் குலத்தைக் காக்கும் தெய்வம் தான் குலதெய்வம். இந்நிலையில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணையில் விளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டால் நீங்கள் வீட்டுக்கு போவதற்கு முன்பு குலதெய்வம் உங்கள் வீட்டுக்கு சென்று இருக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்ததிகளை பாதுகாக்க வேண்டும் என்று வாக்கு கேட்கலாம். அதேபோல முன்னோர்களையும் ஆடி அமாவாசை நாளில் இலுப்பை எண்ணெய் ஏற்றி வழிபடலாம். ஏதாவது தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கண்டிப்பாக இதை அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது உங்கள் வீட்டில் இருந்து வெல்லம் கொண்டு போய் குலதெய்வ கோயிலில் கொடுப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.




