மாரடைப்பு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
மாரடைப்பு அறிகுறிகள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இந்த பதிவை படித்து கண்டிப்பாக தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப்போகிறது என்றால் அதற்கு முன்னாலே ஒரு சில அறிகுறிகள் எல்லாம் தென்படும். அவற்றை நாம் சாதாரணமாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னதாக மாரடைப்பின் முதல் அறிகுறி என்னவென்றால் இடது கையில் கடுமையான வலி ஏற்படும் இந்த வலி 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அதுமட்டுமின்றி இதனுடன் அதிகமான வியர்வை மயக்கம் குமட்டல் இதன் தீவிர அறிகுறியாக காணப்படுகிறது. மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது என்று கூறுவார்கள். குறிப்பாக 65% மக்களுக்கு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவமனைக்கு செல்வதன் மூலம் உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்.




