நமது உடலின் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் வேண்டும். என்னதான் அந்த உணவில் நற்குணங்கள் நிறைய அடங்கி இருந்தாலும் ஒரு சிலர் அதை சாப்பிடக்கூடாது. அந்த வகையில் மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் காண்போம்.
நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதேபோல உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் மாவிலத்தை சாப்பிடக்கூடாது. மாம்பழத்தை சாப்பிட்டால் சூடு அதிகமாகும் என்பதனால் நமது முகத்தில் முகப்பரு அதிகமாக வரும்.
ஆகையால் முகத்தில் முகப்பரு யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களும் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. என்னதான் மாம்பழத்தில் இருக்கும் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நமக்கு தேவை என்றாலும் இந்த பிரச்சனை இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடாமல் இருப்பதே நல்லதாகும்.




