உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா..!! இதை செய்யுங்கள் போதும்..!!

நமது வீடுகளில் கரப்பான் பூச்சிகள் ஈக்கள் கொசுக்கள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் கவலைப்பட்டும் வருவார்கள். இதற்கு என்ன வழி இருக்கிறது என்று இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம்.

இப்படி பூச்சிகள் நம் வீட்டில் இருப்பதற்கு ஒரே முக்கிய காரணம் நமது வீடுகளை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது தான். நம் வீட்டின் சமையலறை மற்றும் கழிவறைகளில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருக்கும். காரணம் சுத்தமில்லாமல் வைத்திருப்பது தான். நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் எந்த அளவு சுத்தம் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்மால் பூச்சிகளை துரத்த முடியும்.

அது மட்டும் இல்லாமல் இந்த கரப்பான் பூச்சிகள் அழுக்கான இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் காரணத்தினால் கிருமிகளின் தொற்று அதிகமாக பரவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு இந்த கரப்பான் பூச்சிகளை எளிதில் அகற்ற முடியும். சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை சம அளவு கலந்து வீட்டின் மூலைகளில் தடவினால் போதும் கரப்பான் பூச்சிகள் வீட்டிலிருந்து ஓடிவிடும்.

இப்படி வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். மூன்று வாரங்களில் இந்த கரப்பான் பூச்சிகளின் தொல்லை இல்லாமல் போய்விடும். மேலும் நம் வீடுகளில் இருக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு வெந்நீரில் சிறிதளவு வேப்ப எண்ணெய் கலந்து வீட்டில் இருக்கும் மூலைகளில் தெளிக்கும் போது கரப்பான் பூச்சிகள் மட்டுமில்லாமல் மற்ற பூச்சிகளும் ஓடிப் போய்விடும்.

Read Previous

பாலை குடித்தால் உண்மையாகவே சருமம் ஜொலிக்குமா..!! அசத்தல் தகவல்கள் இதோ..!!

Read Next

வெண்டைக்காய் பொரியலை இப்படி செய்து பாருங்கள்..!! அசத்தலான டிப்ஸ் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular