கர்நாடகா: ருக்ஷனா பானு என்ற இரண்டரை வயது சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்தார். அங்கு சமையல் கூடத்தில் பெரிய அண்டாவில் சாம்பார் தயார் செய்யப்பட்டிருந்தது. அதை சுற்றி விளையாடி கொண்டிருந்த பானு தவறுதலாக சாம்பாருக்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பானு உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.




