தந்தை மேல் நம்பிக்கை.. தந்தையின் விழிகள் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்தது..!! படித்ததில் பிடித்தது..!!

ஒரு சின்ன பெண்ணும்,
அந்த பெண்ணின் தந்தையும் ஒரு காட்டாற்றின் குறுக்கே இருந்த மிக குறுகலான பாலத்தை கடக்க ஆரம்பித்தார்கள்.

பாலத்தை கடக்கும் போது சற்றே பயந்த தந்தை, அந்த குழந்தையிடம் சொன்னார்,

“என் கையை கெட்டியாக பிடித்து கொள். இல்லையென்றால் நீ தவறி கிழே விழுந்து விடப் போகிறாய்”..

அதற்கு அந்த குழந்தை சொன்னது,

“இல்லையப்பா.. நீங்கள் என் கையைப் பிடித்து கொள்ளுங்கள்” என்று…

உடனே தந்தை கேட்டார்,

“யார் கையை யார் பிடித்தால் என்ன? அதில் என்ன வித்தியாசம் இருக்கு ?”…

அதற்கு அந்த பெண் குழந்தை சொன்னது,

“அப்பா, நான் உங்கள் கையைப் பிடித்து வரும் போது எனக்கு ஏதாவது நேர்ந்தால் பயத்தில் நான் உங்கள் கையை விடுவித்து உங்களைப் போக விட்டு விடுவேன். அதே நேரத்தில், நீங்கள் என் கையைப் பிடித்து செல்லும் போது எனக்கு ஏதும் ஏற்பட்டால், நீங்கள் எப்போதும் என் கையை விட்டு விட்டு போகமாட்டீர்கள் என்று எனக்கு உறுதியாக தெரியும். அதனால நீங்களே என் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்”… என்றாள்.

தன் பெண் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்த்து தந்தையின் விழிகள் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்தது.

Read Previous

உங்க வீட்டுல அடிக்கடி பால் திரிந்து போகுதா?.. அப்போ இந்த ஆபத்து காத்திருக்குமாம்..!!

Read Next

திருமண வீட்டில் கொதிக்கும் சாம்பாருக்குள் விழுந்த சிறுமி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular