சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்..!! குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது..!!

நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்தவர்கள் சாத்துக்குடி சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்து உடல் வலு பெறும். சாத்துக்குடி பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு இதை பழமாகவோ, சாறாகவோ கொடுப்பது நல்ல பலன் தரும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது. இது முகம் பொலிவடைய உதவுகிறது.

  1. சாத்துக்குடியை சாப்பிடுவதால் உடனடியாக இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சக்தியை விரைவில் வழங்குகிறது.
  2. சாத்துக்குடி வயிற்று புண்களை குணப்படுத்துகிறது.
  3. சாத்துக்குடியை சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
  4. சாத்துக்குடி நமது உடலை உறுதிப்படுத்துகிறது.
  5. சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது,இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து சருமத்தை பளபளப்பாக்குகிறது,இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
  6. சாத்துக்குடி சாப்பிட்டால் உடலில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  7. சாத்துக்குடியை சாப்பிடுவதால் நரம்புகள் பலப்படும்,புண்கள் ஆறும்.
  8. சாத்துக்குடி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்துகிறது.
  9. சாத்துக்குடிஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து மலட்டுத்தன்மையை சரிசெய்கிறது.
  10. சாத்துக்குடி சாறுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பொலிவு பெறும்.
  11. சாத்துக்குடி கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.
  12. சாத்துக்குடி செரிமானத்திற்கு சிறந்தது , இந்த சாறை பருகுவதாலோ அல்லது பழத்தை உண்பதாலோ ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

Read Previous

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்றைய தங்கம் விலை நிலவரம்..!!

Read Next

வடுமாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி..?? முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular