பஞ்சாப் & சிந்து வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு – தமிழகத்தில் 85 பணியிடங்கள்
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியாகும். சமீபத்தில், வங்கி உள்ளூர் வங்கி அதிகாரிகள் (Local Bank Officers) பதவிக்கான மொத்தம் 750 பணியிடங்களை அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 85 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.48,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
-
குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
-
அதிகபட்ச வயது ஆகஸ்ட் 30, 1995-க்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.
-
அதேபோல், ஆகஸ்ட் 1, 2005-க்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க இயலாது.
-
அரசு விதிகளின்படி, சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
தேர்வு முறை:
-
எழுத்துத் தேர்வு
-
மெரிட் பட்டியல்
-
உள்ளூர் மொழித் தேர்வு
-
நேர்காணல்
தமிழ்நாடு தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 4, 2025.
இந்த வேலை வாய்ப்பு வங்கி துறையில் பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.




