Oplus_131072
அல்சர் நோய் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடலாமா?
நிச்சயம் கூடாது..
எனக்கும் அல்சர் பிரச்சனை உண்டு..
டீகடையில் டீமாஸ்டர் சாதா டீக்கு பதிலாக இஞ்சி டீ போட்டு விட்டார்..
நானும் டீ வேஸ்ட் ஆக கூடாது எனும் காரணத்தால் குடித்து விட்டேன்..
மறுநாள் காலை அடி நாக்கில் புண் ஏற்பட்டது…அப்படியே அது மோசமான வாய் முதல் வயிறு புண் உருவாக்கி விட்டது..
எனவே என் அனுபவத்தில் சொல்கிறேன் இஞ்சி டீ வேண்டாம்.
மேலும் அல்சர் பிரச்சினையை குறைக்க ஆங்கில மருத்துவத்தில் உள்ள மாத்திரைகள்,டானிக் எடுத்துக்கொள்ள வேண்டாம்.. அது உங்களை அடிமையாக்கி விடும் நீங்கள் நினைத்தாலும் அதை விட முடியாது…
எனக்கு தெரிந்தவரை பிரச்சினையை முற்றிலும் குணப்படுத்த முடியாது..
அதை கட்டுக்குள் வைக்க நான் செய்யும் விஷயங்கள்
பழைய சோற்று தண்ணீர்..
200ml அளவில் தேங்காய் பால்..
200ml விதையுடன் கூடிய வெண்பூசணிசாறு.
அதிகாலை வேளையில் இதில் ஏதாவது ஒன்றை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்.. இதைப் பருகிய பிறகு ஒரு அரை மணி நேரத்திற்கு வேறு ஏதும் சாப்பிடக்கூடாது..
இதையெல்லாம் விட அதி அற்புதமான ஒரு மருந்து முன்பு கிடைத்தது இப்ப அது கிடைப்பதில்லை பெரும்பாலும் போலியாக இருப்பதால் அதை பரிந்துரைப்பது இல்லை அதன் பெயர் அரூட் மாவு (கூகைக்கிழங்கு பவுடர் )..




