ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) முதுநிலை விளம்பர ஆய்வாளர், தலைமை சட்ட உதவியாளர் உட்பட 312 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் மற்றும் சட்ட படிப்பு முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், வயது வரம்பு 18 முதல் 40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜன.29-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.




