வாழை இலையின் மகத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Oplus_131072

வாழை இலையின் மகத்துவம்

நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே … அந்தக் கோட்டைப் போட்டது யார்..

# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் …. ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் …
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் …
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி …உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் … இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்… அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.

சாம்பார், புளிகுழம்பு, ரசம், மோர் என சாப்பிட காரணம் உடலுக்கு தேவையான அறுசுவை மற்றும் ஆரோக்கியமாக வைத்து இருக்கும் என்பதினால் முறைபடி சாப்பிடுகிறோம்.

வாழை இலையில் சாப்பிட்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் பாரம்பரியம் பாரட்டபட வேண்டிய விசயம்.

Read Previous

வீட்டிலேயே விட்டமின் அடங்கிய நீரைத் தயாரித்து தட்டையான வயிற்றை பெறுவது எப்படி..??

Read Next

தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular