காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான மாணவர் சபரிவாசன். இவர், 3 மாதங்களுக்கு முன்பு வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாய் கடித்ததை தந்தைக்கு பயந்து மறைத்த மாணவர், பாட்டியிடம் கூறியதும் உரிய சிகிச்சை பெறாமல் மூலிகை வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.




