முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சரின் பெங்களூரு கிளையில் காலியாக உள்ள ‘அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர்’ பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், Site Reliability Engineering பிரிவில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கில மொழியில் நல்ல புலமை இருப்பதுடன், தொழில்நுட்ப சிக்கல்களை கண்டறிந்து தீர்க்கும் டிரபிள் சூட்டிங் திறனும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், தேவையான அனுபவமும் கொண்டவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஐடி துறையில் பணிபுரிய விரும்பும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இது நல்ல வேலைவாய்ப்பாக அமைந்துள்ளது.




