இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 வேலைவாய்ப்புகள்: பட்டதாரிகள் ஆக.24க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வங்கி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், பணியிடம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு: https://www.iob.bank.in/en/careers

 

Read Previous

‘டிசி’ படத்தை பாராட்டிய சூர்யா: படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..!!

Read Next

பெண்களின் உடல் பருமன்: கருமுட்டை வளர்ச்சியையும் பாதிக்குமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular