“கணவரை கொன்று விபத்து போல சித்தரிக்க வேண்டும்” – வாட்ஸ்அப் உரையாடலால் சிக்கிய மனைவி..!!

 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ், தனது மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கண்டுபிடித்துள்ளார். அவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததுடன், அந்த நபருடன் வாட்ஸ்அப்பில் நடந்த உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். அதில், “என் கணவரை கொன்று அதை விபத்து போல சித்தரித்து விடு” என மனைவி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த வாட்ஸ்அப் உரையாடல்களை ஆதாரமாகக் கொண்டு ராஜேஸ்வர ராவ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மனைவியும் அவரது ஆண் நண்பரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Read Previous

அக்சென்ச்சரில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு..!!

Read Next

வெற்றிலையின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் சளி, இருமல் வரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular