கருணைக் கிழங்கு சாப்பிட்டா இந்த பிரச்சினைலாம் கூட தீருமா..?? நாக்கு அரிக்காம எப்படி சமைக்கலாம்..!!

Oplus_131072

 

கருணைக் கிழங்கு இந்திய பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தக் கூடிய கிழங்கு வகைகளில் ஒன்று. இதில் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

உடல் எடை குறைய

பொதுவாக உருளைக்கிழங்கு போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் இருக்கும் அதிக அளவிலாக ஸ்டார்ச் மற்றும் கார்போ ஹைட்ரேட்டினால் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் இருக்கிறது. ஆனால் கருணைக் கிழங்கைப் பொருத்தவரையில் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். அதோடு உடலில் கொழுப்புக்களைச் சேர விடாமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்கவும் வழி வகை செய்கிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க

கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அஜீரணக் கோளாறுகளை நீக்கும். ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது. பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் வல்லமை கருணைக் கிழங்கிற்கு உண்டு.

உடல் சூட்டை தணிக்க

கருணைக் கிழங்கிற்கு உடல் சூட்டைக் குறைத்துக் குளிர்ச்சியாக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கருணைக் கிழங்குக்கு உண்டு. குறிப்பாக, நாள்பட்ட உடல் சூடு, மூலத்தினால் ஏற்படும் சூடு, எரிச்சல், அதிக அளவிலான காய்ச்சல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். பசியின்மையைப் போக்கவும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது.

Read Previous

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

Read Next

இரயில் தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போட்டு வைத்திருப்பதன் காரணம் என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular