விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை பிரியங்கா (30). வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான இரண்டரை மாதங்களில் நடந்த இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிரியங்காவின் தாயார் சுமதி அளித்த புகாரில், வரதட்சணை தராவிட்டால் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கணவர் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.




